பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்த நாளிலிருந்து சுவாரஸியத்திற்கு பஞ்ம் இல்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.இந்த நிலையில் இந்த வாரத்திற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க் தரப்பட்டுள்ளது. இதில் ஏலியனாக வேடமிட்டுள்ள தனலட்சுமி பழங்குடியின மக்களிடம் மாட்டிக் கொள்ள, இவருக்கும் ஷிவினுக்குமான பேச்சு அப்போது வருகிறது. இதில் முதலில் ஷிவின் ஏதோ ஒரு புரியாத பாஷையில் பதில் பேசுவதாகவும், ஆனால் பழங்குடி மக்கள் பேசும் பாஷை புரியும் என்றும் சண்டையிடுகிறார்.
மேலும், அப்போது தனலட்சுமியை தொட்டு ஷிவின் பேசும்போது, “நீ ஏன் என்னை தொடுற? ச்சீ.. எனக்கு இரிட்டேட் ஆகுது. தொடாம பேசு” என தனலட்சுமி ஆவேசமாக கத்துகிறார். பின்னர் ஷிவின் தமிழில் பேச வேண்டும் என பிக்பாஸ் கூற, அதன் பின்னர் தனலட்சுமி மற்றும் மணிகண்டன் இருவரும் அவர் தவறாக விளையாடி நேரத்தை வீணடித்ததாக வாதம் செய்தனர்.
மேலும் பேசியவர் தான் கேட்பதற்கு ஷிவின் பதில் சொல்லவில்லை என்றும் அதே சமயம், ஷிவின் அழுதுவிட்டதாகவும் சொல்லி, அதனால் ஷிவின் தோற்றுவிட்டதாகவும் கூறுகிறார். அப்போது தொடுவது ரூல் புக்கில் இல்லை என்று சொல்லும் மணிகண்டன், “ஷிவின் ஒரு டம்மி பீஸ்.. நீ விடு” என தனலட்சுமியிடம் கூறுவதையும் காணலாம்.
Listen News!