தமிழ் சினிமாவில் 1999 ஆம் ஆண்டு
வெளியான கள்ளழகர் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து திரைத்துறையில் நடிகராக சோனு சூட் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அதே ஆண்டு நடிகர் விஜய் நடித்த
நெஞ்சினிலே திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த இவர், தமிழ் படங்களின் மூலம் திரையுலகிற்கு வருகை என்ரி கொடுத்தார்..
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்ரா கதாபாத்திரம், என பல்வேறு கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், 2008-ஆம் ஆண்டு ஜோத அக்பர் என்ற ஹிந்தி திரைப்படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்காக முதலில் பிலிம்பேர் சிறந்த துணை நடிகருக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இவரிற்கான ரசிகர் பட்டாளமே உருவாகியது.
இவர் கொரோனா காலங்களில் தன்னால் முடிந்த உதவிகளை வழங்கியவர், இந்நிலையில் நடிகர் சோனு சூட் சாதாரண வீதியில் இருக்கும் பஞ்சர் போடும் கடையில் ஒரு நாள் பஞ்சர் மெக்கானிக்காக வேலைபார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் சோனுவை வாழ்த்தி வருகின்றனர்.
Listen News!