தமிழ்நாடு முழுவதும் கடந்த 11ம் தேதி திரைக்கு வந்த வாரிசு திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இருப்பினும் இப்படம் 150 கோடிக்கு மேல் வசூலித்து விட்டதாக இன்றைய தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.அத்தோடு படத்தின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக அண்மையில் படக்குழுவினருக்கு விஜய் விருந்தும் அளித்திருந்தார்.
இது ஒரு புறம் இருக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் திராவிட மாடல், சூப்பர் ஸ்டார் விவகாரம் என பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து பேசினார்.
மேலும் விஜய் கட்சி தொடங்கினால் கூட்டணியாக பார்க்க முடியாது. தனித்துப் போட்டியிடத்தான் நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது. முதலில், விஜய் கட்சி தொடங்க வேண்டும். அதற்கு பின்பு கொள்கையை முன்வைக்க வேண்டும். அதன்பின்பு, ஒத்த கருத்து இருந்தால் இணைந்து பயணிக்கலாம்.கார்த்தி, சூர்யா, சிம்பு உள்ளிட்டவர்களுக்கு பிரச்னை வரும்போது நான் பேசியுள்ளேன். ரசிகர் மன்றத்தை வைத்து நான் ரசிகர்களை சந்திக்கவில்லை. நான் நேரடியாக மக்களை சந்தித்து படையைத் திரட்டினோம்.
சூப்பர் ஸ்டார் என்பது பட்டம் அது பட்டயம் கிடையாது. அந்தந்த காலத்தில் ஒருவர் சூப்பர் ஸ்டாராக வருவார்கள். இந்த தலைமுறையில் விஜய் உயர்ந்து நிற்கிறார். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சரத்குமார் சொல்லியது சரிதான். விஜய்யின் படத்தை தான் பெண்கள் குழந்தைகள் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள். எதார்த்தத்தை ஒத்துக் கொள்ள வேண்டும். ஒரு தமிழன் சூப்பர் ஸ்டார் என்றால் உங்களால் ஏன் தாங்க முடியவில்லை? என்ன பிரச்சினை? உங்களுக்கு அவர்தான் உயர்ந்த நிலையில் உள்ளார். ரஜினியிடம் கேட்டாலும், அவரும் இதைத்தான் சொல்லுவார். அவரும் ஒத்துக் கொண்டு விட்டார் என்றார்
Listen News!