தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் ரம்யா கிருஷ்ணன். தன்னுடைய சிறுவயதிலேயே நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.ஹீரோயினாக நடித்து வந்ததை விட தற்பொழுது குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் போது தான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகின்றார்.
சமீபகாலமாக சிறந்த துணை கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் என மிகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இந்த நிலையில் ரஜினியுடன் 23 வருடம் கழித்து மீண்டும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இத் திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு சொல்லிக் கொள்ளும் படியான கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில் படையப்பா படத்தில் ஏண்டா வில்லியாக நடித்தோம் என முதலில் வேதனை பட்டாராம்.
ஆனால் மக்கள் கொடுத்த வரவேற்பால் நினைத்தது தவறு என புரிந்து கொண்டாராம். அதே போல் பாகுபாலி படத்தில் நடிப்பதற்கும் ஏராளமான கண்டீசன்கள் போட்டாராம். ஆனால் அந்தப் படமும் தனக்கு ஒரு உயரிய அந்தஸ்தை பெற்று கொடுத்தது.இதெல்லாம் சொல்லி முடித்த ரம்யா கிருஷ்ணன் அந்தப் படங்களில் நடிக்கும் போதெல்லாம் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனேன் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு சிரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!