சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் நெல்சன் கூட்டணி சேர்ந்து இருக்கும் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.தற்போது சென்சார் பணிகளும் முடிந்து U/A சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் ரஜனிகாந்த் பல்வேறு விடயங்கள் குறித் பேசியிருந்தார். குறிப்பாகு குடிக்கு எதிராக பேசியிருந்தார். இவர் இவ்வாறு பேசியது ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பயில்வான் ரங்கநாதன் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் எதை பேச வேண்டும், எதற்காக பேச வேண்டும் என்று எதுவுமே தெரியாமல் பேசி இருக்கிறார்.
முதலில் நெல்சனை அசிங்கப்படுத்தினார். அவரிடம் 10 மணிக்கு கதை சொல்ல வர சொன்னா 12 மணிக்கு வராரு. வந்தும் கதை சொல்லாமல் சூப்பரா காபி கேட்டாரு, அதற்கு பிறகு, காவாலா பாட்டுக்கு செம ஸ்டெப் இருக்குனு சொல்லிட்டு இரண்டே இரண்டு மூமெண்ட்டுதான் கொடுத்தாரு என்று அசிங்கப்படுத்திவிட்டு பிறகு படப்பிடிப்பில் ஹிட்லர் மாதிரி இருப்பாரு என்று தடவிக்கொடுக்கிறார்.
பின், குடிக்கு நான் அடிமையாகி இருந்தேன், அந்த கெட்டப்பழக்கம் மட்டும் இல்லை என்றால் இன்னும் நான் புகழின் உச்சிக்கு சென்று இருப்பேன் என்று கூறிய ரஜினி, ஜாலியாக இருக்கணும்னு கொஞ்சமாக குடிங்க என்று சொல்லலாமா, நீங்களே இப்படி சொன்னால், ரசிகர்கள் ஜாலிக்காக குடிக்கிறேன் என்று சொல்லி குடிக்க மாட்டார்களா.
அதே போல, குட்டி கதை சொல்லுகிறேன் என்று காக்கா கழுகு கதை சொன்னாரு, அந்த கதையை எதுக்கு சொன்னாரு என்றே தெரியவில்லை. பின் தடித்த வார்த்தையால், குறைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நாம வேலைய பாத்துட்டு நேரா போயிட்டே இருக்கனும் என்று பேசி இருந்தார்.
எதற்கு இப்படி கூறுகெட்டத்தனமாக பேசியிருந்தார் என்று எனக்கு தெரியவில்லை. இவரை பற்றியும் இவரது குடும்பத்தை பற்றியும் எழுதும் பத்திரிக்கையாளர்களை நாய் என்கிறாரா? இந்த வயதில் ரஜினி இப்படி தடம் மாறி பேசுகிறாரே என்ற ஆதங்கத்தில் தான் இப்படி பேசுகிறேன். மற்றபடி ரஜினி என்றும், எனக்கு நண்பர் தான் என்று பயில்வான் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.
Listen News!