• Sep 21 2024

7 வயது சிறிய நடிகரை திருமணம் செய்தது ஏன்?: அர்ச்சனா பூரன் சிங் விளக்கம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் அர்ச்சனா பூரன் சிங்.

மேலும் இவர் நடிகர் பர்மீத் சேத்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரை விட பர்மீத் 7 வயது சிறியவர். இந்நிலையில் வயது வித்தியாசம் பற்றி அர்ச்சனா தெரிவித்திருப்பதாவது…

நான் பர்மீத்தை 1992ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். மேலும் முன்னதாக நான்கு ஆண்டுகள் காதலித்தோம். வயது வித்தியாசம் பற்றி பேசியபோதும் அது எங்களுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. ஒருவர் மீது மற்றொரு வைத்திருக்கும் அன்பு அதிகமாக இருந்ததால் திருமணம் செய்து கொண்டோம்.

அத்தோடு எங்கள் குடும்பத்தாருக்கு அந்த வயது வித்தியாசம் பெரிதாக தெரிந்தது. உன்னை விட சிறியவரை திருமணம் செய்யும் முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யோசி என்று என் குடும்பத்தார் தெரிவித்தார்கள். ஆனால் நான் தெளிவாக இருந்தேன்.
parmeet sethiஎங்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையில் பல விஷயங்களை ஒன்றாக கடந்து வந்திருக்கிறோம். வயதை பற்றி நினைத்ததே இல்லை என்றார்.

Advertisement

Advertisement