காதல் வந்தால் சொல்லி அனுப்பு... உயிரோடிருந்தால் வருகிறேன் என்ற பாடலை எப்படி நம்மால் மறக்க முடியாதோ. அதே போல இயற்கை படத்தில் க்யூட்டாக நடித்த குட்டி ராதிகாவையும் மறக்க முடியாது. 2003ம் ஆண்டு ஷாம் நடித்த இப்படத்தில் குட்டி ராதிகா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இயற்கை படத்திற்கு பின் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்த குட்டி ராதிகாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதையடுத்து, 2000ம் ஆண்டு ரத்தன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், 2002ம் ஆண்டு ரத்தன் குமார் திடீரென இறந்தார். இவரின் மரணம் குறித்து குட்டி ராதிகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய குட்டி ராதிகா, சினிமாவிலும் பொது இடத்திலும் தலைகாட்டாமல் இருந்தார். திடீரென ஒரு நாள் குழந்தையும் கையுமாக வந்து, அப்போது கன்னட முதலமைச்சராக இருந்த குமாரசாமிக்கும் தனக்கும் 2006ம் ஆண்டு திருமணமாகிவிட்டதாகவும் தங்களுக்கு ஷமிகா என்ற ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், திருமண விஷயம் வெளியில் தெரிந்தால் பிரச்சனை என்பதால், இத்தனை ஆண்டு வெளிநாட்டில் வசித்து வந்ததாகவும் கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.
குட்டி ராதிகா தற்போது பல படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Listen News!