தளபதி விஜய் நேற்று 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதன்மை தேர்ச்சி பெற்ற மாணவர்களை அழைத்து விருது மற்றும் உதவி தொகையும் வழங்கினார்.
அங்கு பேசிய விஜய் மாணவர்களிடம் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அரசியல் குறித்தும் பேசினார். இதில், அம்பேதகர், காமராஜர், பெரியார் போன்ற தலைவர்களை பற்றி மாணவர்களை படிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், அசுரன் படத்தில் இடம்பெற்ற வசனத்தையும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், இதுகுறித்து அசுரன் பட இயக்குநர் வெற்றிமாறனிடம் கேட்டபோது, "சினிமாவில் சொல்கிற ஒரு கருத்து முக்கியமான நபர்களை சென்றடையும் போது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று கூறினார்.
மேலும், "நமது வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும் அம்பேத்கர், பெரியார், காமராஜரோடு அண்ணாவையும் படிக்க வேண்டும்" என கூறினார் வெற்றிமாறன்.
அம்பேதகர், காமராஜர், பெரியார் என மூவரை மட்டும் கூறிய நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் அண்ணாவையும் மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் விஜய் அண்ணாவின் பெயரை மேடையில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!