நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் கடந்த 11ஆம் தேதி அன்று வெளியாகி உள்ளது.அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா என முக்கிய நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அத்தோடு வாரிசு படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார்.
அத்தோடு, இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி கைப்பற்றி உள்ளார். சேலம் ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார்.
மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அத்தோடு , வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்ததும் சென்னை ரோகிணி திரையரங்கில் அழுதது குறித்து இசையமைப்பாளர் தமன் தனியார் ஊடகம் ஒன்றிற்குபிரத்யேகமான சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது "நான் அழுது 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. என் மகனின் பிறப்புக்கு மனைவியின் பிரசவ வலியை நினைத்து மட்டுமே நான் அழுதேன். வாரிசு படம் பார்த்ததும் அழுது விட்டேன். 130 படங்கள் செய்துவிட்டாலும் சென்னையில் பிறந்த ஒரு பையனான எனக்கு கனவு என்பது விஜய் சாருக்கு படம் பண்ணுவது. எல்லா பாடல்களும் ஆப்சன் டியூன் பண்ணவே இல்லை. கடைசி 20 நாள் நாங்கள் தூங்கவே இல்லை. ரிலீஸ் தேதி மாறிய பிறகு இன்னும் அதிக உழைக்க வேண்டி இருந்தது. அதிலும் கடைசி 10 நாள் தூங்கவே இல்லை. இந்த வாய்ப்புக்கு தான் நான் காத்திருந்தேன். டிசம்பர் 16 முதல் ஜனவரி 9 வரை தூங்கவே இல்லை. ரசிகர்கள் தியேட்டரில் கை தட்டும் போது அழுகை வந்து விட்டது." என தமன் தெரிவித்தார்.
Listen News!