விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லாஸ்லியா. இவர் பிக்பாஸில் போட்டியாளராக இணைந்து கொள்வதற்கு முன்னர் இலங்கையில் உள்ள ஒரு சேனலில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி இருக்கின்றார்.
இதன் மூலமாகவே இவருக்கு 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் 3 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டதோடு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டு இருக்கின்றார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் லொஸ்லியா. அந்த வரிசையில் இறுதியாக ஹர்பஜன் சிங் மற்றும் சிவாவுடன் 'ப்ரெண்ட்ஸிப்' படத்தில் நடித்து புகழ் பெற்றார். அடுத்து பிக்பாஸ் தர்சனுக்கு ஜோடியாக 'கூகிள் குட்டப்பா' என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படமும் பிளாப் ஆனது.
சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துகொள்வார்.தற்போது நெற்றியில் விபூதியடன் மங்களகரமாக Good morning ☕️ என்று பதிவிட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
Listen News!