மலையாள திரையுலகில் பிரபலமான இயக்குநராக வலம் வந்தவர் தான் இயக்குநர் சித்திக். 1989ஆம் ஆண்டு வெளியான ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ப்ரெண்ஸ் திரைப்படத்தின மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
விஜய் , சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்த இத்திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.விஜய் மற்றும் சூர்யாவின் கெரியரில் முக்கியமானதொன்றாக அமைந்தது.இவர் கடைசியாக மலையாளத்தில் பிக் பிரதர் என்ற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கியிருந்தார்.
சித்திக் அண்மையில் மாரடைப்பு காரணமாக இறப்புக்குள்ளானார்.அவரது உயிரிழப்புக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். நடிகர் சூர்யாவும் தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார். அதிலும் சூர்யா "என் மனதை நினைவுகள் கனமாக்கியுள்ளன. சித்திக்கின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது இரங்கல்கள். இந்த துயரமான தருணத்தில் நான் உங்கள் அனைவருடனும் நிற்கிறேன்.
'ப்ரெண்ட்ஸ்' எனக்கு பல்வேறு வழிகளில் முக்கியமான படம். சிறிய காட்சியில் நன்றாக நடித்தாலும் உடனே பாராட்டி ஊக்கமளிக்கும் பண்பு கொண்டவர் சித்திக். படப்பிடிப்பின்போதும், எடிட் செய்யும் போதும் எனது நடிப்பு குறித்த தனது எண்ணங்களை மிகுந்த அன்புடன் பகிர்ந்துகொள்வார். ப்ரெண்ட்ஸ்' படம் எடுக்கும் சமயத்தில் சீனியர் மற்றும் புகழ்பெற்ற இயக்குநராக இருந்த சித்திக் அனைவரையும் சமமாக நடத்துவர்.
படப்பிடிப்பு தளத்தில் அவர் கோபமடைந்தோ, குரலை உயர்த்தியோ நான் பார்த்ததில்லை. அவருடன் பணிபுரிவது என்றும் எனக்கு விருப்பமான ஒன்று. என்னையும் என் திறமையையும் நம்ப வேண்டும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்தார். எப்போது சந்தித்தாலும் என்னுடைய குடும்பத்தை பற்றி அக்கறையாக விசாரிப்பார். ஒரு நடிகனாக நான் உருவான ஆரம்ப காலக்கட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. மிஸ் யூ சார். எங்களுக்கு நீங்கள் அளித்த நினைவுகளும் அன்பும், எங்களை முன்னோக்கி அழைத்து செல்லும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சித்திக் மறைவுக்கு சூர்யா இரங்கல் தெரிவித்துவிட்டார். ஆனால் விஜய் ஏன் சொல்லவில்லை. வளர்ந்த பிறகு வளர்த்துவிட்டவரை மறந்துவிட்டாரா விஜய் என ரசிகர்களில் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர் எனபதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!