சமூக வலைத்தளங்களில் மிகவும் விவாதப் பொருளாக மாறியுள்ள விடயம் தான் மன்சூர் அலிகான் த்ரிஷாவை தவறாகப் பேசியது.இதனால் மன்சூர் அலிகான், த்ரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும் என்று நடிகர் சங்கம் உட்பட பிரபலங்கள் பலரும் கேட்டு வருகின்றனர்.இருந்தாலும் மன்சூர் அலிகான் தன்னால் மன்னிப்புக் கேட்க முடியாது என்று தெரிவித்து விட்டார்.
இந்த நிலையில் பிரபல பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அனைவரும் மன்சூர் அலி கானை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதில் தற்போது நிறைய மாற்றம் தெரிகிறது. உண்மையில் இது ஒரு நல்ல விஷயம், சாக்கடையை புறக்கணிப்போம் என்று சொல்வதை விடுத்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்வது அவசியம் என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் பார்க்கிறார்கள்.
ஆனால் நயன்தாரா தனது சொந்த படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்ட போது ராதாரவி அவரை அவதூறாக பேசினார். அவர் பேசி 2 நாட்கள் ஆனபோதும் யாரும் இதை கண்டிக்கவில்லை, யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை, விளக்கம் கொடுங்கள், மன்னிப்பு கேட்கவில்லை, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து விசாரிக்கவில்லை. அப்போது திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பின் பாஜகவில் இணைந்து மீண்டும் நயன்தாராவை அவதூறாகப் பேசினார். அப்போதும் தேசிய மகளிர் ஆணையம் அதை கண்டுக்கொள்ளவில்லை. சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் த்ரிஷா விவகாரத்தில் பலரும் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது போக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தகக்கது.
Listen News!