சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்ற புகழ்பெற்ற ஆஸ்கர் விருது விழாவில், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.
இந்த மகிழ்ச்சியான செய்தி இணையம் முழுவதும் நிரம்பியுள்ளது. கடந்த சில நாட்களாக இதற்காக வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமே உள்ளது. ஆஸ்கார் விருதை வென்ற பிறகு, ஆர்ஆர்ஆர் படக்குழு இப்போது இந்தியாவுக்குத் திரும்பியுள்ள நிலையில், நடிகரும் பாடகருமான நக்குல், ட்விட்டரில் தனது வாழ்த்து செய்தியை பகிர்ந்து கொண்டார்.
மேலும், அந்த வாழ்த்து செய்தியில் அவர் தனது ‘நாக்க முக்க’ பாடலுக்கு ஆஸ்கார் விருது ஏன் கிடைக்கவில்லை என்பது குறித்து ஒரு மீம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அதில், ஆர்ஆர்ஆர் பாடல் ஆஸ்கர் விருது பெற்றது மிகவும் பெருமையாக உள்ளது, அது போல் ரசிகர்கள் சிலர் ‘நாக்க முக்க’ பாடலுக்கு ஏன் ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை கேள்வியை எழுப்பியது என் முகத்தில் ஒரு புன்னகையைத் தருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, 2007-ம் ஆண்டு வெளியான “நாக்க முக்க” இந்தப் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்த பாடல் இந்தியாவின் பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக உருவெடுத்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!