சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் காயத்திரி கிருஷ்ணன். இந்த சீரியலைத் தவிர அயலி என்னும் வெப் சீரியலிலும் நடித்து பிரபல்யமானார். இந்த நிலையில் இவர் பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது
இப்போ சினிமாவுக்குள்ள வாறவங்க எல்லோரும் எடுத்தவுடனே பெரிய திரையில பெரிய பெரிய ஹீரோவோட நடிக்கணும் என்று நினைக்கிறாங்க.ஆனால் அப்படி வர முடியாது நாங்க எல்லோரும் முதலில் நாடகங்களில் தான் நடித்து வந்தேன். அதுக்கு பிறகு தான் சினிமாவில் நடிக்கவே வாய்ப்புக் கிடைச்சது.
எதிர் நீச்சல் சீரியலில் நடிக்கிறதுக்கான சாறிகளாக இருக்கட்டும் போடுற நகைகள் ஆவது இருக்கட்டும் எல்லாமே நான் தான் செலக்ட் பண்ணுறேன்.வெளில போனால் கூட என்னை எல்லாரும் ஜான்சி ராணி என்று சொல்லும் போது ரொம்ப பெருமையாக இருக்கு வேற என்ன வேணும்.
எதிர் நீச்சல் சீரியலில் குணசேகரன் காரெக்டர்ல நடிக்கும் மாரிமுத்து சேர் யார் நல்லா நடிச்சாலும் முதலில் அவர் தான் போய் வாழ்த்துத் தெரிவிப்பாரு.அதே மாதிரி யாரும் சரியா நடிக்காவிட்டால் முதலில் போய் சொல்லுவார். அப்பிறம் ஒரு மாதிரி ஆகிடுவாரு. அவருக்க எல்லாருமே சூப்பராக நடிக்கணும் அவ்வளவு தான்.
மேலும் எல்லா நடிகைகளும் சொல்லுற மாதிரி படுக்கைக்கு வா என்று யாரும் என்னை கூப்பிட்டதில்லை. என் திறமையைப் பார்த்து வாய்ப்புத் தருவதென்றால் தா மற்றும் படி எல்லாம் வர முடியாது. என்னை அப்படி யாரும் கூப்பிட்டதும் இல்லை. எனக்கு இயக்குநர் பாலா சேரினுடைய படத்தில் நடிக்க தான் ஆசை. அதே மாதிரி அயலி படத்தைப் பார்த்திட்டு வணங்கான் படத்தில இருந்து போன் பண்ணி பேசினாங்க என்றும் இன்னும் பல சுவாரஸியமான விடயங்களையும் பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!