தென்னிந்திய சினிமாவிலும் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழில் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம், ஜெயரம் ரவி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.
தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வரும் இவர் தற்பொழுது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.அதன்படி ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். டாப் ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நயன்தாரா ஃபீமேல் சென்ட்ரிக் படங்களிலும் நடித்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகும் நயன்தாராவின் மார்க்கெட் கொஞ்சமும் குறையவில்லை. அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்நிலையில் நயன்தாராவை மீண்டும் சீண்டியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன். ஏற்கனவே ஒரு முறை நயன்தாராவை, மருத்துவமனைவியில் மரண படுக்கையில் இருப்பது போன்ற காட்சியில் நடிக்கும் போது கூட ஃபுல் மேக்கப்பில் இருக்கிறார் என சாடியிருந்தார்.
அதற்கு நயன்தாராவும் பதிலடி கொடுத்திருந்தார். அந்த சீனில் இயக்குநர் சொன்னப்படிதான் இருந்தது என்று கூறியிருந்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள மாளவிகா மோகனன் மீண்டும் நயன்தாராவை அட்டாக் செய்துள்ளார். அதாவது நடிகைகளை லேடி சூப்பர் ஸ்டார் என்ற சொல்லாதீர்கள். தீபிகா படுகோன் ஒரு சூப்பர் ஸ்டார், ஆலியா பட் ஒரு சூப்பர் ஸ்டார் என்று சொல்லுங்கள் என கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா மீது அப்படி என்ன கோபம் உங்களுக்கு என கேட்டு வருகின்றனர்.மலையாள நடிகையான மாளவிகா மோகனன், ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அடுத்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து தனுஷுடன் மாறன் படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!