• Nov 14 2024

நீங்கள் ஏன் நிர்வாணமாக நடிக்கவில்லை- நிருபரின் கேள்விக்கு சத்தமாக நச்சுன்னு பதில் சொன்ன ஐஸ்வர்யா ராய்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தனது 21 வயதில் மிஸ் வேர்ல்ட் என்ற பட்டத்தை பெற்று தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் பெங்காலி ஆங்கிலம் என அனைத்து மொழித்திரைப்படங்களிலும் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.இவரைப் பிடிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.

இவர் கடந்த 2007ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இந்த இத்தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அந்த வகையில் இவர் தற்பொழுது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் நிருபர் ஒருவர் ஏன் நிர்வாணமாக நடிக்கவில்லை என்று இவரிடம் கேட்டிருந்தார். அதற்கு பதில் கூறிய ஐஸ்வர்யா நான் ஒருபோதும் நிர்வாணத்தை ஆராய்ந்ததில்லை, நிர்வாணத்தை ஆராய்வதில் எனக்கு ஆர்வம் இல்லை என்று பதில் அளித்தார். தொடர்ந்து, அந்த நிருபர் மோசமான கேள்வியை கேட்டதால், கேமரா மேனை சுற்றிப் பார்த்து சத்தமாக, ஒரு பெண்ணிடம் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு பேசுங்கள். நீங்கள் ஒரு பத்திரிகையாளர், அந்த வேலையை மட்டும் செய்யுங்கள் என நச்சுனு பதில் அளித்தார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன ஒரு மோசமான கேள்வி என்றும், ஒரு நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் கேட்கலாமா என்றும் கேட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement