• Nov 17 2024

துணிவு ப்ரோமோஷன் செய்யாதது ஏன்? தயாரிப்பாளர் சொன்ன அதிரடி காரணம் இது தான்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித், ஹெச் வினோத் இயக்கத்தில் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்துவிட்டார். அடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என அறிவிப்புக்காக ரசிகர்கள் தற்போது காத்திருக்கிறார்கள்.

துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகி இருந்த நிலையில் தற்போது வரை 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் வந்திருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது.துணிவு படம் விஜய்யின் வாரிசு படத்துடன் மோதிய நிலையிலும் அதை பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யவில்லை தயாரிப்பாளர். அதற்கு காரணம் என்ன என சமீபத்திய பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு பதிலளித்த போனி கபூர், "பட ப்ரோமோஷனுக்கு எதிரானவன் இல்லை நான். ப்ரோமோஷன் செய்தால் அதிக ஆடியன்ஸிடம் ரீச் கிடைக்கும். அதற்கு RRR மற்றும் டாப் கன் மேவரிக் போன்ற படங்கள் தான் சாட்சி. 

ஆனால் துணிவு படம் பற்றி ரசிகர்கள் அப்டேட் கேட்டுக்கொண்டே தான் இருந்தார்கள். அதற்க்கு காரணம் அஜித் தான். அஜித்தின் ஸ்டார் அந்தஸ்து தான் துணிவுக்கு ப்ரோமோஷன். நடிகர்கள் கொடுக்கும் சப்போர்ட்டை வைத்து தான் எப்படி ப்ரோமோஷன் செய்ய முடியும் என்பதை தயாரிப்பாளர் முடிவு செய்ய முடிகிறது" என கூறியிருக்கிறார்.


Advertisement

Advertisement