• Sep 21 2024

இந்த விஷயத்தை எப்பிடி என் கிட்ட சொல்லாமல் இருக்கலாம்,- மணி- ரவீனா காதலுக்கு குறுக்க நிற்கும் ஐசு- குழப்பத்தில் ஹவுஸ்மேட்ஸ்

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்ததில் இருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. அத்தோடு ஹவுஸ்மேட்ஸ் தங்களுக்குள் மோதலில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இதுவரை எந்த லவ் ட்ராக்கும் தொடங்கவில்லை, ஆனால் ரவீனா மற்றும் மணி இருவரும் எப்போதும் ஜோடியாக சுற்றி கொண்டிருப்பதால் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு சந்தேகம் எழ தொடங்கி இருக்கிறது.

ஆனால் காதல் என்ன அவர்கள் இருவரும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை.இந்நிலையில் மற்றொரு போட்டியாளரான ஐஷு தனக்கு மணியை கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக தெரியும் என கூறி இருக்கின்றனர்.


ஆனால் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து என்னை தெரியாதது போலவே மணி காட்டிக்கொள்கிறார் என ஐஷு கூறி இருக்கிறார். மேலும் அவர்கள் இருவரிடமும் இனி பேச மாட்டேன் என்றும் மாயாவிடம் சொன்னார்.அத்தோடு ஐசு மணி அண்ணா எனக்கு அண்ணா மாதிரி இந்த விஷயத்தை சொல்லாமல் விட்டால் கஷ்டமாக இருக்கும் தானே என ரவீனாவிடமும் கேட்கின்றார்.

பதிலுக்கு ரவீனா எதுக்கு சொல்லனும், அப்படி ஒன்றுமே இல்லையே என இருவருக்கும் இடையில் சின்ன வாக்குவாதம் ஏற்பட பின்னர் மணி வந்து இதை பற்றியே பேசவேணாம் இரண்டு பேரும் ஒற்றுமையாக இருங்க,இதை அப்பிடியே விட்டிடுங்க என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement