கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இருந்து
நடிகர் துல்கர் சல்மான் விலகினார் என்ற செய்தியை காலையில்
பார்த்தோம். நடிகர் துல்கர் சல்மான் ஏற்கனவே பல திரைப்படங்களில் கமிட்
ஆகியுள்ள நிலையில் ’தக்லைஃப்’ படத்திற்காக மொத்தமாக கால்ஷீட் கொடுக்க முடியாததால் இந்த படத்தில் இருந்து
விலகி விட்டதாகவும் முதலில் செய்திகள் வெளியானது
ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படத்தில்
இருந்து அவர் விலகியதற்கு வேறொரு
காரணம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் இன்னொரு
முக்கிய கேரக்டரில் ஜெயம் ரவி நடித்திருக்கும் நிலையில்
அந்த கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து,
துல்கர் சல்மான் கேரக்டர் டம்மி செய்து விட்டதாக தெரிகிறது.
ஆரம்பத்தில் கமல்ஹாசனுக்கு அடுத்து துல்கர் சல்மான் கேரக்டர் தான் முக்கியத்துவம் வாய்ந்தது
என்று கூறப்பட்ட நிலையில் தான் அவர் இந்த
படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் கதையின் போக்கு திடீரென மாறியதாகவும் ஜெயம் ரவி கேரக்டருக்கு முக்கியத்துவம்
கொடுத்து துல்கர் சல்மான் கேரக்டருக்கு சிறப்பு தோற்றம் போல் மாற்றியதாகவும், அதனால்தான்
அதிருப்தி அடைந்த துல்கர் சல்மான் இந்த படத்தில் இருந்து
விலகி விட்டதாக கூறப்படுகிறது.
அது மட்டும் இன்றி சம்பள விவகாரத்தில் சில பிரச்சனைகள் இருந்ததாகவும்
அதனால் தான் துல்கர் சல்மான்
நாகரிகமாக யார் மீதும் பழி
போடாமல் தன்னால் கால்ஷீட் மொத்தமாக ஒதுக்க முடியாது என்ற காரணத்தை மட்டும்
தெரிவித்து விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது
மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ என்ற
படத்தில் ஹீரோவாக நடித்த துல்கர் சல்மான், மீண்டும் இன்னொரு முறை அவரது இயக்கத்தில்
நடிக்க வாய்ப்பு கிடைத்தபோதும் அதை பயன்படுத்தாமல் விலகி
இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!