• Nov 19 2024

விஜய்யின் ‘தளபதி 69’ படம் டிராப்பா? எந்த நிறுவனமும் தயாரிக்க முன்வரவில்லையா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ திரைப்படத்தை ’பாகுபலி’ ’ஆர்ஆர்ஆர்’ உள்ளிட்ட பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்த டிவிவி என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்நிறுவனம் அதிக பட்ஜெட் காரணமாக பின் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வேறு சில தயாரிப்பு நிறுவனங்களிடம் விஜய் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் புதிய தயாரிப்பு நிறுவனம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

தளபதி விஜய்யின் படத்தை தயாரிக்க ஒரு சில நிறுவனங்களால் மட்டுமே முடியும் என்பதும் குறைந்தது 300 முதல் 350 கோடி ரூபாய் பட்ஜெட் தேவை இருப்பதால் பெரிய நிறுவனங்கள் மட்டுமே விஜய் படத்தை தயாரிக்க முடியும். அந்த வகையில் லைக்கா, சன் பிக்சர்ஸ், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ, ஏஜிஎஸ் போன்ற நிறுவனங்களால் மட்டுமே விஜய்யின் படங்களை தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 



இந்த நிலையில் தளபதி விஜய் அரசியல் கட்சி தொடங்கி விட்டதால் அவரது கடைசி படம் அரசியல் சார்ந்த படமாக இருப்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்துக்கு நெருக்கமான லைக்கா தயாரிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. மேலும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் ’லியோ’ படத்தை தயாரித்து விட்டு அரசியல் நெருக்கடியை சந்தித்ததால் இந்நிறுவனமும் விஜய் படத்தை தயாரிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. 

தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்யை வைத்து ’கோட்’ படம் தயாரித்தாலும் அப்போது விஜய் அரசியல் குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை, ஆனால் தற்போது அரசியல் அறிவிப்பை வெளியிட்டு விட்டதால் ஆளுங்கட்சியிடம் இருந்து நெருக்கடி ஏற்படலாம் என்பதால், இந்நிறுவனமும் தயாரிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் 69வது படத்தை தயாரிப்பது யார்? ஒருவேளை இந்த படம் டிராப் செய்யப்படுமா? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் 26வது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாக இருக்கும் நிலையில் அந்த அறிவிப்பு ’தளபதி 69’ படமா இருக்குமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement