மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ரவீணா ரவி, லால் மற்றும் விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.
மாமன்னன் படம் 40 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் ஈட்டிய நிலையில், சந்தோஷமடைந்த ஹீரோ உதயநிதி மினி கூப்பர் காரை இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சமீபத்தில் பரிசாக வழங்கி இருந்தார்.
மாமன்னன் படத்தில் வடிவேலு மாமன்னனாக வாழவில்லை என்றும் மண்டுவாகத்தான் இருந்தார் என்றும் எம்எல்ஏவாக பதவி கிடைத்தும் தனது மக்களுக்கு அவர் என்ன செய்தார் என்பதையே காட்டவில்லை என்றும் தனக்கு கிடைத்திருக்கும் பதவியின் வேல்யூவே தெரியாமல் பகத் ஃபாசில் குடும்பம் போட்ட பிச்சை என நினைத்துக் கொண்டிருக்கிறார் அவர் எப்படி ஹீரோவாகிறார் என்று தான் தெரியவில்லை என விளாசி உள்ளார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் பன்றி மேய்ப்பது போல காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், வடிவேலு அந்த பக்கம் போன மாதிரியே சீன் இல்லை என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
மாமன்னன் படத்தை இயக்கியதற்கு கோடிக் கணக்கில் சம்பளம் வரப்போகுது அதை வைத்து அவர் கார் வாங்கிக் கொள்ளலாம். அவருக்கு எதுக்கு உதயநிதி 57 லட்சத்துல கார் வாங்கிக் கொடுக்கிறார்.
அவர் ஒரு விளையாட்டுத் துறை அமைச்சர் அந்த பணத்தில் பல விளையாட்டு வீரர்களுக்கு உதவி இருந்தால் ஒரு புண்ணியமாக போயிருக்கும் என்றும் ப்ளூ சட்டை மாறன் கார் பரிசாக அளித்த விஷயத்தை ட்ரோல் செய்து தனது புதிய வீடியோவில் பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
Listen News!