• Nov 10 2024

விஜய் சொன்னது இன்று வரையிலும் நடக்கவே இல்லை – வருத்தப்படும் சரண்யா பொன்வண்ணன்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். 

இப்போது உள்ள ரசிகர்களுக்கு ஏன் சினிமா கலைஞர்களுக்கு கூட பேவரெட் அம்மா யார் என்று கேட்டால் உடனே சரண்யா பொன்வண்ணன் என்று சொல்வார்கள்.

காரணம் அவர் அந்த அளவிற்கு அம்மா வேடத்தில் நிறைய நடித்து மக்கள் மனதில் தனக்கான தனி  இடத்தை பிடித்துள்ளார்.



மேலும் இவர் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் எல்லா ஹீரோக்களுடன் இணைந்து அம்மாவாக நடித்துவிட்டார், ஆனால் விஜய்யுடன் மட்டும் இன்னும் இணைந்து நடிக்கவில்லை.

குருவி படத்தில் நடித்திருக்கிறார் ஆனால் விஜய்யின் அம்மாவாக அதிலும் நடிக்கவில்லை.



இவ்வாறுஇருக்கையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் சரண்யாவிடம் விஜய்யுடன் மட்டும் ஏன் அம்மாவாக இன்னும் நடிக்கவில்லை என கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஏன் என்றே தெரியவில்லை, அதற்கான வாய்ப்பு அமையவில்லை அதான் உண்மை.

ஆனால் அவர் என்னை பொது நிகழ்ச்சியில் சந்தித்தால் கண்டிப்பாக நாம் இணைந்து ஒரு படம் பண்றோம் என சொல்வார்.வருங்காலத்தில் கண்டிப்பாக நாங்கள் இணையும் வாய்ப்பு வரும் என சொல்லியுள்ளார்.


Advertisement

Advertisement