• Nov 19 2024

சூர்யா, சுதா கொங்கரா படம் டிராப் ஆனதற்கு காங்கிரஸ் கட்சி காரணமா? அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ’புறநானூறு’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படம் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில் இந்த படத்தின் நாயகி, வில்லன் உட்பட ஒரு சிலர் ஒப்பந்தம் ஆனதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பு காலதாமதம் ஆகும் என்று சுதா கொங்கரா அறிவித்த நிலையில் கிட்டத்தட்ட இந்த படம் ட்ராப் என்றும் கூறப்பட்டது. இந்த படம் எதனால் டிராப் என்று திரை உலகினர் பலர் பல்வேறு காரணங்களை கூறி வந்தாலும் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.



இந்த படத்தின் கதைப்படி ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் ஒரு அரசியல் கட்சியின் கதையாக இருந்த நிலையில் இந்த படத்தில் காங்கிரஸ் கட்சி குறித்து சில நெகட்டிவ் கருத்துக்களை தெரிவிக்கும் வசனம் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியை நெகட்டிவ்வாக காண்பிக்கும் படத்தில் தான் நடிக்க விரும்பவில்லை என்று சுதா கொங்கராவிடம் சூர்யா கூறியதாகவும் அந்த காட்சிகளை வேறு வகையில் மாற்றும்படி அவர் கூறியதாகவும் தெரிகிறது.

ஆனால் சுதா கொங்கரா அப்படி கதையை மாற்றினால் இந்த படத்தின் ஜீவனே போய்விடும் என்றும் அவ்வாறு மாற்ற முடியாது என்று கூறியதை அடுத்து சூர்யா இந்த படத்தை டிராப் செய்யுமாறு கூறி விட்டதாக தெரிகிறது. இதுதான் உண்மையான காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது போகப் போக வெளியாகும் தகவல்களில் இருந்து  தெரியவரும்.

மொத்தத்தில் சூர்யா சுதா கொங்கரா இணையும் படம் டிராப் என்பது மட்டும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement