• Nov 14 2024

போலீசை தாக்கும்படியான படங்கள் எடுப்பது ஏன்?. முதல் முறை உண்மையை கூறிய வெற்றிமாறன்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெற்றிமாறனின் படங்கள் எல்லாமே வெற்றி பெறுவதற்கான காரணம், ஒரு கதையின் ஆழத்தை உணர்ந்து படத்தை எடுத்திருப்பார். எனினும் தற்போது சூரியை வைத்து விடுதலை படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில்  விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்த சூழலில் விடுதலை படமும் போலீஸ் கதை களத்தை கொண்டுள்ளது. இந்த படத்திலும் என்கவுண்டர் பற்றி சொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவருடைய விசாரணை படத்திலும் காவல்துறையின் அடக்குமுறைகள் காண்பிக்கப்பட்டது.

வெற்றிமாறன் இயக்கம் மற்றும் தயாரிக்கும் படங்களில் பெரும்பாலும் காவல்துறையை தாக்கும் படியாக விஷயங்கள் வைக்கப்படுகிறது. எனினும் சமீபத்தில் வெற்றிமாறனிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அதாவது குறிப்பாக காவல்துறையை மட்டும் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும்  பொதுவாக மக்கள் மீது ஒரு அமைப்பின் ரீதியாக ஒடுக்கு முறைகள் நடத்தப்படுவது அதிகம் காவல்துறையினால் தான். ஆகையால் தான் இது போன்ற படங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதாக வெற்றிமாறன் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

அதில் தன்னுடைய விடுதலை படபிடிப்பு நிறைவு பெற்றதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார்.. வெற்றிமாறன் விடுதலை படத்தை முடித்த கையோடு சூர்யாவின் வாடிவாசல் படத்தை எடுக்க உள்ளார்.

அத்தோடு வெற்றிமாறன் வாடிவாசல், பேட்டைகாளி போன்ற தமிழர்களின் பெருமை சாற்றும் ஜல்லிக்கட்டை மையமாக எடுத்து வரும் படங்களை மக்களுக்கு கொண்டு செல்வதிலும் ஆர்வமாக இருக்கிறார். தொடர்ந்து வெற்றியை மட்டுமே கொடுத்து வரும் வெற்றிமாறனின் விடுதலை படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement