• Sep 20 2024

மணக் கோலத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்... ஏன் இந்தத் திடீர் மாற்றம்... கமெண்டுகளைத் தெறிக்க விடும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக 'அசத்தப்போவது யாரு' என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர். பின்னர் 'மானாட மயிலாட' எனும் ரியாலிட்டி ஷோவில் இவர் வழங்கிய அற்புதமான நடனத்தின் மூலம் வெற்றி பெற்றிருந்தார்.



அதனைத் தொடர்ந்து 'அட்டகத்தி' படம் இவருக்கு சிறந்த வாய்ப்பை கொடுக்க இப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் அமுதமாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்திற்கு பின்னர் இவர் நடித்த 'காக்கா முட்டை' திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதினை வென்றார்.



இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருகின்றார். இவ்வாறாக படங்களில் பிஸியாக நடித்து வருகின்ற ஐஸ்வர்யா ராஜேஷ் எப்போதும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கின்ற ஒருவர். அதில் சமீபகாலமாக கவர்ச்சிகள் கொஞ்சம் தூக்கலாக காட்டிய புகைப்படங்களை அள்ளித்தெளித்து வருகிறார்.



இந்நிலையில் தற்போது புடவை அணிந்து குடும்பக் குத்து விளக்காக மாறி மணப்பெண் அலங்காரத்தில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். அத்தோடு "ஏன் இந்தத் திடீர் மாற்றம்" எனக் கேட்டு தமது கமெண்டுகளைத் தெறிக்க விட்டும் வருகின்றனர்.



Advertisement

Advertisement