பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாகவும், யோகி பாபுவின் மனைவியாக நடித்திருந்தவர் தான் ஆனந்தி.இதனைத் தொடர்ந்து சூர்யாவின் சூரரைப்போற்று படத்திலும், தாராளப்பிரபு, டி பிளாக் போன்ற படத்திலும் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள RJ ஆனந்தி, பெண்ணியம் என்பது இன்று ஒரு கெட்ட வார்த்தையாகவே மாறிவிட்டது. பெண்ணியவாதிகள் பெண்ணின் சம உரிமை பற்றி பேசுகிறார்கள். ஆனால் நான் பெண்ணியம் பற்றி பேசியதில், புத்தக ரிவியூவில் மட்டுமே பேசி இருக்கிறேன். ஆனால், எனக்கும் பெண்ணிய எண்ணங்கள் இருக்கிறது. ஆணுக்கு எதிரானது பெண்ணியம் இல்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.
சினிமாவில் வரும் பல கெட்டவார்த்தைகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலேயே இருக்கின்றன. பெண்ணை அவமதிக்கும் கெட்டவார்த்தையை ஏன் சினிமாவில் பயன்படுத்த வேண்டும். அதுபோன்ற கெட்டவார்த்தையை சினிமாவில் வைக்காமல் தவிர்க்கலாமே. நான் சந்தித்த 90 சதவீதம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார்.
பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைத்துக்கொள்ள வேண்டும்,ஷால் போட வேண்டும், பின் குத்திக்கொள்ள வேண்டும் என பயமுறுத்தியே வைத்து இருக்கிறார்கள். மூடி மூடி வைப்பது எந்த அளவிற்கு உதவும் என எனக்குத் தெரியவில்லை. ஒரு பையனுக்கு பெண்ணின் உடல் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். அப்போது தான் அவன், மற்ற பெண்களை பார்க்கும் போது இயல்பாக இருப்பான். ஆனால், மூடி மூடி வைக்கும் போது, அதை திறந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் வரும் என கூறியுள்ளார். நடிகை ஆனந்தி இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!