• Sep 20 2024

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி இனிமேல் ஆட மாட்டார்களா?- திடீரென வைரலாகும் டுவிட்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. இவர்கள் இருவரும் தற்பொழுது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடியாக நடனம் ஆடி வருகின்றனர்.அந்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை ராஜு மற்றும் ப்ரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர்.

மேலும் அமீர் பாவனியை காதலிப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே தெரிவித்திருந்தார்.இதனை அடுத்து பி பி ஜோடிகளிலம் தனது காதலை பல முறை வெளிப்படுத்தி விட்டார். ஆனால் பாவனியோ இன்னும் சரியான முடிவினை தெரிவிக்கவில்லை.

மேலும் கடந்த வாரம் திருமண சுற்று நடந்தது. அதில் பாவனிக்கும் அமீருக்கும் விஜய் டிவி மேடையிலேயே திருமண தீம் வைத்து திருமணத்தையும் செய்து வைத்து விட்டனர்.அதன் புகைப்படங்கள் முதலில் தீயாக கசிந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலேயே அமீர் கால் பிரச்சனையாகவே இருந்தது. இந்நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வுக்காக ரொம்பவே சிரமப்பட்டு தொடர்ந்து கஷ்டமான ஸ்டெப்புகளை கொரியோகிராஃப் செய்து நடனமாடி வந்தார். அந்த நிகழ்ச்சியின் போது அமீர் காலில் பிரச்சனை இருந்ததாகவும், அதையும் தாண்டி அவர் நடனமாடினார் என தற்போது பாவனி போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை பதற வைத்துள்ளது.


ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்றால் அமீர் ரெஸ்ட் எடுத்திருக்கலாம். ஆனால், அதையும் தாண்டி எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் எழுந்து நிற்கும் உன் மனசுக்குத்தான் உன்னை எல்லாரும் லவ் பண்றாங்க என பதிவிட்ட நிலையில், மறைமுகமாக தனது காதலையும் பாவனி வெளிப்படுத்தி உள்ளாரா? என்கிற கேள்விகளை எழுப்பி உள்ளனர். திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தையும், மருத்துவ ரிப்போர்ட்டையும் ஷேர் செய்துள்ளார் பாவனி.

பாவனி இப்படியொரு டுவீட்டை போட, அமீரின் முயற்சி ரொம்பவே பெரிய விஷயம். நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த பர்ஃபார்மன்ஸை தரமா செய்யுங்க என ரசிகர்கள் டேக் கேர் அமீர் என போட்டு வருகின்றனர். பாவனியின் இந்த திடீர் டுவீட் காரணமாக இருவரும் இனி தொடர்ந்து ஆட மாட்டார்களா? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.


Advertisement

Advertisement