தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் 'பைலட்ஸ்' என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியதோடு தமிழ் சினிமாவில் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தின் மூலமாகவே கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து 'ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா எனப் பல ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
இவ்வாறாக டாப் ஹரோயின்களில் ஒருவர் என்று கூறுமளவிற்குப் பல படங்களில் நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷிற்குத் தற்போது நேரம் சரியில்லையா அல்லது வேறு ஏதும் காரணங்களோ தெரியவில்லை தற்போது இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே ஃபிளாப் ஆகி வருகின்றன. எனினும் சிறிதளவேனும் சலிக்காமல் தொடர்ந்தும் பல படங்களில் நடித்து வருகின்றார்.
அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பில் தற்போது 'மாமன்னன்' எனும் திரைப்படம் தமிழில் உருவாகி வருகிறது. மேலும், தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு தங்கையாக 'போலோ ஷங்கர்' எனும் படத்தில் இவர் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்புக்கள் தற்போது நடைபெற்று வருகிறது.
சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் நடிகை கீர்த்தி சுரேஷ், தனது சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே. அந்த நிலையில் அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோயோக்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவார். இவ்வாறாக தற்போதும் கீர்த்தி சுரேஷ், #WeddingDressUp என்ற ஹேஷ்டேக்குடன் போட்டோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் பலர் கீர்த்தி சுரேஷின் அழகை பாராட்டினாலும், இது என்ன புது விஷயமாக இருக்கு. எதற்காக வெட்டிங் டிரெசில் இப்படி விதவிதமாக போட்டோஷுட் நடத்தி வருகிறார். கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறாரா. விரைவில் கல்யாணத்திற்கு தயாராவதால் தான் இதே போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறாரா, மாப்பிள்ளை யார் என்று சொல்லவே இல்லை, என பல விதமாக நெட்டிசன்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிக்கிறார்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் போகிறார்கள் என வதந்தி ஒன்று பரவியது. அதனைத் தொடர்ந்து பிறகு சில நாட்கள் கழித்து கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும், அதனால் தான் படங்களில் அதிகம் நடிப்பதை குறைத்து வருவதாகவும் சிலர் வதந்திகளை பரப்பியிருந்தனர்.
இந்த நிலையில் இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கீர்த்தி சுரேஷின் பெற்றோர் "அந்த தகவல்கள் எதுவும் உண்மை இல்லை. கீர்த்தி சுரேஷ் தற்போதும் சினிமாவில் தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்" எனக் கூறியுள்ளனர்
பிற செய்திகள்
- ஹிப் ஹாப் ஆதியின் மனைவியை பார்த்துள்ளீர்களா…? இதோ புகைப்படம்…!
- முன்னழகு மொத்தத்தையும் காட்டிய நடிகை ராஷி கண்ணா-வைரலாகும் புகைப்படங்கள்..!
- திருமணத்திற்கு பிறகு ஷாருக்கானுடன் ‘அந்த’ காட்சியில் நடிக்கும் நயன்தாரா…வைரலாகும் தகவல்..!
- ரோஹித்தை மடக்கிப்பிடித்த வெண்பா; கண்ணம்மாவை அசிங்கப்படுத்தி அனுப்பிய பாரதி – இன்றைய எபிசோடு அப்டேட்
- சனம் ஷெட்டியின் முன்னாள் காதலருக்கு பிறந்த குழந்தையை கொஞ்சி விளையாடிய பிக்பாஸ் பிரபலம்-தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!