ஜனவரி 11ம் தேதி வெளியான அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் 50வது நாள் கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றன. தியேட்டர்களில் 50வது நாள் ஸ்பெஷல் ஷோக்களை ரசிகர்கள் மன்றங்கள் உற்சாகமாக நடத்தி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில், துணிவு படம் 330 கோடி வசூல் செய்துள்ளதாக திடீரென அஜித் ரசிகர்களும் சில மீடியாக்களும் டிரெண்ட் செய்ய தொடங்கியுள்ளார்கள். துணிவு திரைப்படம் ஒட்டுமொத்தமாக 190 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் உலகளவில் என பிஸ்மி உள்ளிட்ட டிராக்கர்கள் கணித்து சொல்லி உள்ள நிலையில், தற்போது அதெல்லாம் இல்லைங்க நாங்க தான் நம்பர் ஒன் துணிவு திரைப்படம் அதிரடியாக 330 கோடி வசூல் செய்துள்ளது என அஜித் ரசிகர்கள் பட்டையை கிளப்பி வருகின்றனர்.
அதிகாரப்பூர்வமாக துணிவு டீமில் இருந்து யாரும் சொல்லவில்லையே என விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் ஷேர் செய்த 330 கோடி வசூல் உருட்டு என ட்ரோல் செய்து வந்த நிலையில், துணிவு படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த நடிகர் ஜான் கொக்கனே துணிவு திரைப்படம் 330 கோடி வசூல் செய்துள்ளதாக வெளியான போஸ்டரை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து அதனை உறுதி செய்திருக்கிறார்.
ஜான் கொக்கனின் பதிவு அஜித் ரசிகர்களை வேறமாறி கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.மேலும் இதனை அடுத்து அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் எஎன்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!