• Nov 19 2024

பிக் பாஸ் நிகழ்ச்சி தடை செய்யப்படுமா..? தொகுப்பாளருக்கு பறந்த நீதிமன்றம் நோட்டீஸ்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகம் முழுதும் ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ்.இது தமிழ், தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

ஹிந்தியில் சல்மான் கான், தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் நாகார்ஜூனா, கன்னடத்தில் சுதீப், மலையாளத்தில் மோகன்லால் என முண்ணனி நட்சத்திரங்கள் இந்த ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது தமிழில் ஆறாவது சீசன் ஒளிபரப்பாவது போல தெலுங்கிலும் தற்போது ஆறாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம் இருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்திருக்கிறார்.எனினும்  அது பற்றி விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம் தற்போது விளக்கம் அளிக்க நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம், மத்திய அரசு, இரண்டு தெலுங்கு மாநிலங்கள் மற்றும் தொகுப்பாளர் நாகர்ஜுனா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.


எனினும் இதற்கு அவர்கள் என்ன பதிலளிக்க போகிறார்கள், ஷோ தடை செய்யப்படுமா என்பதை எல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


Advertisement

Advertisement