• Nov 10 2024

சினிமா மௌனம் கலைக்குமா?- கேன்ஸ் திரைப்பட விழாவில் வீடியோ மூலம் பேசிய உக்ரைன் அதிபர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா பிரான்சில் கொண்டாடப்பட்டு வருகின்றது. நேற்றைய தினம் பிரமாண்டமான ஆரம்பிக்கப்பட்ட இந்த விழாவில் இந்தியாவில் இருந்து மாதவன் இயக்கிய ராக்கெட்ரி, பார்த்திபனின் இரவின் நிழல், ஏ.ஆர்.ரகுமானின் லெ மஸ்க் உள்ளிட்ட பல படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவில் இன்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் திரைப்பிரபலங்கள் ஏ.ஆர்.ரகுமான், தீபிகா படுகோன், கமல்ஹாசன், தமன்னா, பூஜா ஹெட்டே உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். இந்த சர்வதேச விழாவின் எட்டு உறுப்பினர்களை கொண்ட நடுவர் குழுவில் தீபிகா படுகோன் ஒரு நடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கேன்ஸ் திரைப்படத்தின் தொடக்க விழாவில் ரஷிய போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. முன்னதாக ஆஸ்கர் விருது விழாவிலும் ரஷ்யா - உக்ரைன் போர் குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது . அதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது,

உக்ரைனில் தினம் தினம் நூற்றுக்கணக்கான மக்கள் மடிகின்றனர். இவற்றை பார்த்துகொண்டு சினிமா அமைதியாக இருக்குமா? அல்லது உரக்க பேசுமா? 2வது உலகப்போரில் ஹிட்லர் செய்த கொடூரங்களுக்கு எதிராக சார்லி சாப்ளின் தைரியமாக டிக்டேட்டர் என்ற படத்தை வெளியிட்டார். அது ஹிட்லரின் போரை கிண்டல் செய்து எடுக்கப்பட்டது.


சாப்ளின் உண்மையான சர்வாதிகாரியை அழிக்கவில்லை. ஆனால் சினிமா மெளனம் காக்காமல் சத்தமாக பேசியது. சினிமா ஊமை இல்லை என்பதை நிரூபிக்க புதிய சார்லி சாப்ளின் தேவைப்படுகிறது என பேசியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement