• Nov 14 2024

கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் குறித்து தளபதி விஜய் நலம் விசாரிப்பாரா?-எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தில் நடித்து தன் திரைப் பயணத்தை ஆரம்பித்தவர் கேப்டன் விஜயகாந்த். தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை, தூரத்து இடிமுழக்கம், உழவன்மகன் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து தமிழில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார்.

இவர் கிட்டத்தட்ட 150 திரைப்படங்கள் மேலாக நடித்துள்ளார் இவ்வாறு சினிமாவில் பிசியாக கலக்கி வந்த கேப்டன் விஜயகாந்த் பின்னர் அரசியலில் இணைந்தார். அரசியலில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்த வேளையில் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டார். இதனால் தற்பொழுது அரசியலிலும் இருந்து ஓய்வெடுத்துள்ளார்.

Captain Vijayakanth meets Superstar Rajinikanth Photos HD

அண்மையில் வழமையான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாதிருந்தது, இதனால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவருடைய விரல்கள் அகற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன், எனப் பல பிரபலங்கள் தமது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ளனர்.

ஆனால் இதுவரையில் நடிகர் விஜய், கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு பற்றி எந்த தகவலையும் கூற வில்லை. கேப்டன் விஜயகாந்தின் வெற்றி திரைப்படத்தில் தளபதி விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, செந்தூரப்பாண்டி என தொடர்ந்து பல படங்களில் விஜயகாந்துடன் இணைந்து விஜய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தளபதி விஜய், விஜயகாந்தை நலம் விசாரிப்பாரா? அல்லது நேரில் சென்று பார்ப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement