2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.இந்த படத்தின் மூலமே தனக்கென ஓரு அடையாளத்தை உருவாக்கி கொண்டார்.
அதனை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது.
இதன் பின் இவர் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வசூலிலும் அள்ளிக்குவித்தது.
தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்.
அத்தோடு , இந்த படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல முக்கிய நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படம் ஜூன் 3ஆம் தேதி வெளிவர இருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் ' அஜித்தை வைத்து படம் இயக்குவீர்களா ' என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் ' கண்டிப்பாக இயக்குவேன்.
அதற்கான கதையும் நேரமும் கூடிவரும் போது, அது நடக்கும் ' என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறசெய்திகள்:
- மங்காத்தா ரோலில் மீண்டும் நடிக்கும் அஜித்- 61வது படத்திலிருந்து கிடைத்த புதிய மாஸ் அப்டேட்
- இரண்டு பாகங்களாக உருவாகும் வெற்றிமாறனின் திரைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
- கே.ஜி.எப் பட ஹீரோ யாஷின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..?
- ‘என்னை மட்டும் எதற்கு கேட்கிறீங்க சிம்புவையும் கேளுங்க’- நடிகை ஸ்ரீநிதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
- kpy குரேஷியின் மனைவியை பார்த்துள்ளீர்களா…இதோ புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!