கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதோடு இப்படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளனர்.
னிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது .
இந்நிலையில் ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகின்றது.
எனினும் கடந்த 2020ஆம் ஆண்டு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, அதன்பின் ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக அப்படியே முடங்கியது.
இதன்பின் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநர் ஷங்கர் தெலுங்கிலும், கமல் ஹாசன் விக்ரம் படத்திலும் பிசியாகிவிட்டனர்.
இந்நிலையில், விக்ரம் படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய கமல் ஹாசன், " கண்டிப்பாக இந்தியன் 2 வரும், அதற்கான பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருக்கிறது " என தெரிவித்துள்ளார்.
Listen News!