• Sep 20 2024

ஜவான் திரைப்படம் முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூல் சாதனை செய்யுமா?- செம சூப்பர் அப்டேட்டாக இருக்கே...

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசை அமைத்துள்ளார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படமானது செப்டெம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது.அண்மையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. 

இப்படத்தின் ட்ரெய்லரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.பிரமாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் 1000 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்நிலையில் பாக்ஸ்ஆபிஸ் வல்லுனர்களின் கணிப்பின்படி ஜவான் படம் முதல் நாளில் இந்தியாவில் குறைந்தபட்சமாக கணக்கிட்டாலே 75 கோடி நெட் வசூல் வரலாம் என்றும், சாதாரணமாக 100 கோடிக்கும் மேல் நெட் வசூல் வர வாய்ப்பிருப்பதாக கணித்து இருக்கின்றனர்.


முன்பதிவிலேயே பல லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து இருப்பதால் ஜவான் படம் முதல் வாரத்தில் நல்ல வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு ஷாருக்கான் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பதான் திரைப்படமும் ரூ.1000 கோடி வசூலை எட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement