பிக்பாஸ் என்கிற வார்த்தையை சொன்னதும் அனைவருக்கும் முதலில் ஞாபகத்துக்கு வருவது கமல்ஹாசன் தான். அந்த அளவுக்கு இந்நிகழ்ச்சி மக்கள் மனதில் இடம்பிடித்ததற்கு முக்கியமான காரணமாக விளங்கி இருக்கிறார் கமல். இவர் தொகுத்து வழங்கும் விதம் தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிக்பாஸ் பிரபலம் ஆனதற்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி 2022-ம் ஆண்டு வரை அவர் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தாலும், அவரை மக்களிடையே கொண்டு சேர்த்த ஒரு களமாகவும் பிக்பாஸ் இருந்து வந்தது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. இதில் ஒரே ஒரு வாரம் மட்டும் தான் கமல்ஹாசன் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் கடந்த 2021-ம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அந்த ஒரு வாரம் மட்டும் அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் அசீம் டைட்டில் வின்னர் ஆனார். இது ஒருபுறம் இருக்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் இந்த சீசன் உடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவெடுத்து உள்ளதாகவும், சினிமா வாய்ப்புகள் அதிகம் வருவதால், அதிலும் அரசியலில் மட்டும் கவனம் செலுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.
இதனால் பைனலில் இதுகுறித்த அறிவிப்பை கமல் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபற்றி வெளிப்படையாக கமல் எந்த ஒரு அறிவிப்பை வெளியிடாவிட்டாலும், நேற்றைய பைனல் முடிவின் போது “மீண்டும் சந்திப்போம்” என்று கூறிவிட்டு சென்றார் கமல். இதன்மூலம் தான் அடுத்த சீசனுக்கு தொகுப்பாளராக வருவதை சூசகமாக அறிவித்து விட்டு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!