விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் 'தென்றல் வந்து என்னைத் தொடும்'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் அதிரடித் திருப்பங்களோடு அட்டகாசமாக சென்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சுடரிடம் வெற்றி "நீ விஜி அம்மா விஜி அம்மா என்று கூப்பிடுறாய், அபியை அபி என்று கூப்பிடுறாய், உன் உண்மையான அம்மா யாரு" எனக் கேட்கின்றார். அதற்கு சுடர் "என் அம்மா யாருன்னு நான் சொல்ல மாட்டேன்" என்கிறார்.
மறுபுறம் கண்மணி "நான் முடிவு பண்ணிட்டேன், வெற்றி தான் என் புருஷன், அதைத் தடுக்க எவனாலும் எவளாலும் முடியாது" எனக் கூறி சபதமிடுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.
சுடர் குறித்த உண்மை வெற்றிக்கு தெரிய வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!