• Sep 20 2024

'லவ் டுடே'க்குப் போட்டியாக மாறுமா கவினின் 'டாடா' படம்.. வெளியானது ட்ரெய்லர்.. கொண்டாடத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3இன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே 'சரவணன் மீனாட்சி' என்ற தொடரின் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தனக்கென சம்பாதித்து இருக்கின்றார். 


பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா, அபிராபி, சாக்ஷி எனப் பலருடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும். அந்நிகழ்ச்சியின் பின்னர் இவரின் வாழ்க்கையே மாறி விட்டது. அதாவது சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு மாறி விட்டார். 


அந்தவகையில் கவின் தற்போது ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'டாடா'. கணேஷ் கே பாபு என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்து இருக்கிறார். 


அபர்ணா தாஸ் ஏற்கனவே விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தாலும், இவர் தமிழில் ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படமானது வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. 

கவினின் இப்படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது. இப்படத்தின் உடைய ரிலீசுக்கு இன்னும் ஒரு சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், டாடா படம் குறித்த அப்டேட்டுகளும் ரசிகர்களுக்காக அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.


அந்த வகையில் தற்போது டாடா படத்தின் உடைய டிரைலர் ஆனது வெளியாகி சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது. பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே பாணியில் தான் இந்த படமும் இளைஞர்களை கவரும் வகையில் மிகவும் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ளமை படத்தின் டிரைலர் மூலமாகவே தெரிகிறது. 


லவ் டுடே படத்தைப் போன்று இப்படமும் சக்சஸ் ஆகுமா என்பதை சற்றுப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எது எவ்வாறாயின் கவின் ரசிகர்கள் தற்போது இப்படத்தினுடைய ட்ரைலரை கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement