சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றது.
இந்த சீரியலானது தற்போது கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடைபெறுமா.? என்கிற பரபரப்புடன் நாளுக்கு நாள் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இருப்பினும் கடந்த இரண்டு வாரமாக எழிலின் வரவேற்பு என்று சொல்லி கதை நகராமல் ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருப்பதால் இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் பலருக்கும் சலிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதிலும் எழிலின் திருமண வரவேற்புத் தான் இடம்பெறுகின்றது. அதாவது கயலை குடும்பத்துடன் வெளியே போகுமாறு துரத்துகின்றனர். பதிலுக்கு கயல் அத்தனை பேர் முன்னாடி ஏதாவது பேசினீங்க மரியாதை கெட்டிடும் எனக் கத்துகின்றார்.
மேலும் அன்பிடமிருந்து கிப்ஸ் பொக்ஸை வாங்கி வீசி எறிகின்றனர். எது எவ்வாறாயினும் திரும்பத் திரும்ப எழிலின் திருமண வரவேற்பு நிகழ்வு தான் இடம்பெறுவதால் ரசிகர்கள் கதையினை வேளைக்கு முடிக்குமாறு கூறி தீட்டித் தீர்த்து வருகின்றனர்.
Listen News!