• Sep 20 2024

சினிமாவில் எண்ட்ரி கொடுக்கவுள்ளரா சத்தியராஜின் மகள்..? திடீரென கவர்ச்சியில் குத்தித்து ஏன்..இதோ புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் கதாநாயகனாக நடித்து பல மக்கள் மனங்களை வென்றவரே நடிகர் சத்யராஜ். இவர் திரையுலகில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் திறம்பட நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பினாலே மக்களை அசர வைப்பார்.

 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் சத்யராஜ், இன்றளவும் பிசியான நடிகராகவே வலம் வருகிறார். இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி, பாகுபலி போன்ற படங்கள் மக்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில் நடிகர் சத்யராஜுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரது மகன் சிபி சத்யராஜ், தந்தையைப் போலவே சினிமாவில் நடிகராக வலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிபி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான மாயோன் திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது



மகனை சினிமாவில் நடிக்க வைத்த சத்யராஜ், மகளை இதுவரை சினிமாவில் களமிறக்கவில்லை.மேலும்  இவரது மகள் திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். இவர் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்தாலும், இவர் அவ்வப்போது சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு நடத்தி வரும் போடோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி  வைரலாகிவிடும்.



அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள போடோஷூட் புகைப்படங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஏனெனில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி அவர் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.



அந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் சத்யராஜ் மகளா இப்படி போட்டோஷூட் நடத்தி உள்ளார் என ஷாக் ஆகி உள்ளனர். ஒருசிலரோ அவர் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கவே இப்படி போடோஷூட் நடத்தி உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.




Advertisement

Advertisement