• Sep 20 2024

விஜய்யின் வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு வேடமா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய்.இவர் தற்பொழுது தனது 66வது படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.அத்தோடு இப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் படத்தில் விஜய் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் அப் டெவலப்பராக விஜய் ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது வாரிசு படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஒரு மகளிர் கல்லூரியில் நடைபெற்றுள்ளதாம். இந்த படப்பிடிப்பில் எஸ்.ஜே. சூர்யாவும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறாராம், இரண்டு நாள் மட்டுமே அவருக்கான காட்சிகள் எடுக்க ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement