• Sep 21 2024

சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருதை தட்டித்தூக்குவாரா சூர்யா...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியளவில் வெளியான சிறந்த படங்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படவுள்ளன.

கொரோனா பாதிப்பு உச்சமடைந்திருந்த காரணத்தால் 2020ம் ஆண்டு பல திரைப்படங்கள் ஓடிடித் தளங்களிலேயே வெளியாகின. அதன்படி தமிழில் சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய் சேதுபதியின் க.பெ.ரணசிங்கம் ஆகிய படங்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் இவைகள் தேசிய விருதுக்கு விண்ணப்பித்திருந்தன.

இந்த இரண்டு படங்களுக்கும் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக சூரரைப் போற்று படத்துக்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா நாளை பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில், இன்று தேசிய விருது அறிவிப்பில் அவரது பெயர் இடம்பெற்றால் அது அவருக்கான சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement