• Sep 20 2024

நாளுக்கு நாள் வசூலில் பலத்த அடி வாங்கும் ஆதிபுருஷ்... படக்குழு எடுத்த அதிரடி முடிவு... இனியாவது கூட்டம் வருமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் 600 கோடி பட்ஜெட், 3டி, மோஷன் கேப்சர் டெக்னாலஜி என ஹாலிவுட்டுக்கே சவால் விடும் வகையில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் தான் ஆதிபுருஷ். ஆனால், இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு, விமர்சனம், பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் இவையெல்லாவற்றையும் பார்க்கும் போது மிகவும் பரிதாபமாகவே உள்ளது. 


அதாவது 600 கோடி ரூபாய் பட்ஜெட்டை கொட்டி எடுக்கப்பட்ட படமோ பத்து நாட்கள் நிறைவடைந்த நிலையில் இன்னமும் 500 கோடி ரூபாயைக்கூட நெருங்கவில்லை. அந்தவகையில் மொத்தம் இதுவரை 450 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கின்றது.

இந்த நிலை தொடருமானால் பட்ஜெட்டை எடுப்பதற்கு முன்பாகவே திரையரங்குகளில் இருந்து படத்தை தூக்கும் நிலைமை வந்துவிடும் என்பதனால் படக்குழு தற்போது அதிரடி முடிவொன்றினை எடுத்திருக்கிறது. அந்தவகையில் ஆதிபுருஷ் படத்தை 112 ரூபாயில் பார்க்கலாம் என அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 


ஆகவே இனியாவது திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிறையுமா..? கலெக்ஷன் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement