• Nov 11 2024

நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வாரா? - நயன்தாரா மீது தொடர்ந்து குற்ற சாட்டை வைத்த பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜேடியாக விளங்கிய நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த ஜுன் மாதம் 9ம் திகதி மிகவும் பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணத்தில் பிரபலங்கள் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த அடுத்தநாளே இருவரும் திருப்பதி கோவிலுக்குச் சென்றனர். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் என்பன வெளியாகியிருந்தன. திருப்பதி மலையில் தம்பதிகள் ஏழுமலையான் கல்யாண உற்சவம் சேவையில் கலந்து கொண்டிருந்தார்கள்.

கோவிலுக்கு வெளியே காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டிருந்த போதும் கோவில் முன்புறம் உள்ள பகுதியில் காலணியுடன் சென்று இருவரும் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்கள். இதனை அறிந்த தேவஸ்தான நிர்வாகம் நடைபெற்ற தவறுக்கு யாரும் காரணம் என்று விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஏழுமலையான் கோவில் முன் உள்ள பகுதி, நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர்,கோவில் திருக்குளம் ஆகிய இடங்களில் காலணியுடன் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டோ ஷூட் நடத்த தேவஸ்தானம் இடம் உரிய அனுமதி பெற வேண்டும். இதற்கு முன் இது போல் யாரும் கோவில் உள்ளே போட்டோ ஷூட் நடத்தியது கிடையாது.

இது பற்றி அவர்களிடம் தகுந்த விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அவர்கள் தகுந்த அறிவுரை கூறி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்த தவற விட்டனர் என்று கூறி இருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டு விக்னேஷ் சிவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘திருமணம் திருப்பதியில் நடக்க வேண்டும் என்றுவிரும்பினோம். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் சென்னையில் திருமணத்தை நடத்தி இருந்தோம்.

எங்கள் திருமணம் முழுமையாக நிறைவடைய, திருமணம் முடிந்த கையோடு வீட்டுக்கு கூட செல்லாமல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு வந்தோம். இந்த நாளை நினைவில் வைத்துக் கொள்ள விரும்பி கோவிலுக்கு வெளியே போட்டோஷூட் நடத்தினோம். இதனால் திருப்பதியிலேயே திருமணம் நடந்தது போல் உணர்ந்தோம். ஆனால் மக்கள் கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக கோவில் வளாகத்தை விட்டு வெளியேறிய போதும், போட்டோ எடுக்கும் போது செருப்பு அணிந்திருந்ததை உணரவில்லை.

தாங்கள் நேசிக்கும இறைவனுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படுத்தவில்லை, இதனால் பக்தர்கள் புண்படுத்தப்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் இந்த செயலை கண்டித்துள்ள இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் திருப்பதி ஒன்றும் சர்ச் இல்லை செருப்பணிந்து செல்வதற்கு, இன்று நயன்தாராவை விட்டால் நாளை மற்ற நடிகை ஷூ போட்டு செல்வார். அதனால் நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வாரா? என்று சாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement