• Nov 14 2024

நடிகர்களை விளாசித் தள்ளிய செந்திலைப் பாராட்டிய ப்ளூ சட்டை மாறன்-நடிகர் சங்கக் கட்டடம் கட்டப்படுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய நடிகர்களால் நடத்தப்பட்டு வரும் சங்கம் தான் தென்னிந்திய நடிகர் சங்கம்.இந்த சங்கத்தில் தலைவலாக நாசரும் செயலாளராக விஷாலும் பொருளாளராக கார்த்தியும் இருக்கின்றார்.இந்த நிலையில் நேற்றைய தினம்  67வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நடிகர் சங்க கட்டடம் கட்டுவது குறித்து பேசப்பட்டது.

அப்போது கட்டிடத்தின் கம்பிகள் துருப்பிடித்துள்ளதாக குறிப்பிட்ட விஷால், இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் விரைவில் வங்கிக்கடன் பெற்று நடிகர் சங்க கட்டிட பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். தாங்கள் பொறுப்பேற்ற பின்பு, நடிகர் சங்க கட்டிடம் தவிர்த்த மற்ற கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 


அடுத்தப் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் புதிய கட்டிடத்தில்தான் நடக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். நடிகர் சங்கத்திற்கான இடத்தை மீட்டதே பெரிய விஷயமாக கருதுவதாகவும் தேர்தல் நடப்பதற்கு முன்னால் இன்னும் 5 மாத கால அவகாசம் கொடுத்திருந்தால் கட்டிடத்தை தாங்கள் கட்டி முடித்திருப்போம் என்றும் அவர் இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

 நடிகர் சங்கத்தில் நிதி இல்லையென்ற போதிலும் நடிகர்கள் கார்த்தி, ஸ்ரீமன், பூச்சி முருகன், நாசர் உள்ளிட்டவர்கள் தங்களது சொந்த பணத்தில் நடிகர்களுக்கான மருத்துவ முகாமை நடத்தி வருவதாகவும் தனிப்பட்ட முறையில் நடிகர்களிடம் பணம் பெற்று நடிகர்களுக்கு மருத்துவ முகாம்களை நடத்தி வருவதாகவும் விஷால் கூறியுள்ளார். இந்நிலையில் வங்கிக்கடன் பெற்று நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது குறித்த விஷாலின் பேச்சு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.


எனவே இக்கூட்டத்திற்கு வந்த செந்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோடி கோடியாக ஊதியம் வாங்குகிறீர்களே, நடிகர் சங்க கட்டிடம் கட்ட முடியாதா என்று அனைத்து ஹீரோக்களையும் பார்த்து  செந்தில் ஆவேசமாக தெரிவித்திருந்தார்.இந்நிலையில் செந்திலின் இந்த துணிச்சலான கேள்விக்கு  ப்ளூ சட்டை மாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கலை நிகழ்ச்சி, ஸ்டார் கிரிக்கெட் என டிக்கெட் போட்டு வசூலித்தது போதும் என்று கூறியுள்ள ப்ளூ சட்டை மாறன், கோடீஸ்வர நடிகர்கள் சங்கத்திற்கு பணம் தர வேண்டுமென்று கேளுங்கள், அவர்கள் எவ்வளவு தருகிறார்கள் என்று பார்ப்போம் என்றும் கூறியுள்ளார். சங்கத்தின் கட்டடம் கட்ட தேவையான 40 கோடி ரூபாயை டாப் 10 நடிகர்களே தந்துவிட இயலும் என்றும் கடன் வாங்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இன்னும் எத்தனை வருடத்திற்கு தொடருவீங்கள் என்றும் கேட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement