புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆகிய உலக நாயகன் கமல்ஹாசன் சில படங்களையும் இயக்கியுள்ளார். சிறந்த குழந்தை நட்சத்திரம் சிறந்த நடிகர் என்ற ரீதியில் நான்கு தேசிய விருதுகளும் சிறந்த படம் தயாரிப்பாளர் என்ற ரீதியில் 1 தேசிய விருதையும் 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள்கள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் என பல இந்திய விருதுகளை வென்றுள்ளார். இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் விக்ரம். இப் படம் வருகின்ற ஜூன் மாதம் 3-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப் படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகள் முன்முரமாக நடந்து வருகின்றது .இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்துள்ளார்.
இப் படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இப் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரமாண்டமாக நடைபெற்றது. பான் இந்திய படமாக தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் பிரமோஷன் வேலைக்காகவும், சில புது டெக்னிக்களுக்காகவும் அமெரிக்கா வரை சென்று படத்தை மெருகேற்றியுள்ளார். கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 5000தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவில் 400 திரையரங்குகளிலும்,மும்பையில் 1500 திரையரங்குகளிலும் தமிழ்நாட்டில் 1000 திரையரங்குகளிலும் விக்ரம் படம் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் இந்த படத்தின் புக்கிங் இப்போதே தொடங்கி விட்டது. நான்கு வருடங்களுக்கு பிறகு கமலின் விக்ரம் படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!