• Sep 20 2024

கதிருடன் குத்தாட்டம் போடும் ஜான்சிராணி... விடாமல் துரத்தும் கரிகாலன்... அருண் ஆதிரை கல்யாணம் நடக்குமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஆதிரையினுடைய திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஜனனி "கல்யாண மண்டபத்திற்கு வந்ததில் இருந்து கரிகாலனும் அவ அம்மாவும் ஆடுற ஆட்டம் என்ன..? எங்க மேல விடுற நோட்டம் என்ன..? சும்மா இல்ல விசாலாட்சி அத்தை நாங்க எதிர்பார்த்ததுக்கும் மேல எங்களுக்காக குணசேகரன் மாமாகிட்ட பேசி எங்களை அனுப்பி வைச்சாங்க. துணைக்கு வந்த 2பேரை தொலையட்டும் என்று விட்டாச்சு, இந்த விஷயம் தெரியிறதுக்குள்ள ஆதிரைக்கும் அருணுக்கும் கல்யாணத்தை முடிக்கிறோம்" எனக் கூறுகின்றார்.


மறுபுறம் கதிருடன் சேர்ந்து ஜான்சிராணி ஆட்டம் போடும் வகையிலும், ஆதிரை செல்லும் காரை கரிகாலன் துரத்தி வரும் வகையில் இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. ஜனனியின் திட்டப்படி அருண், ஆதிரை கல்யாணம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement