• Sep 19 2024

வாடிவாசல் அப்படியே கமுக்கமாக வாடி போகுமா? வெற்றிமாறன் சொன்ன சீக்ரெட்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தரமான படங்களை மக்களுக்கு கொடுத்து தனக்கென தனி இடத்தில் இருப்பவர் தான் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான விடுதலை படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது. இதில் இதுவரை காமெடி நடிகராக பார்க்கப்பட்ட நடிகர் சூரி, தனது நடிப்பு திறமையைினால் புகழின்  உச்சிக்கே சென்று வெற்றி நடை போட்டார்.

இதன் இரண்டாம் பாகம் நடிகர் சூரி, விஜய் சேதுபதி உட்பட பிரபல நடிகர்களுடன் தயாராகி வருகின்றது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், தென்காசி அருகே இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


இதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படமாக காணப்படுவது தான் வாடிவாசல். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குவதோடு இதில் சூர்யா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனாலும் அதற்குப் பிறகு சூர்யா அதிலிருந்து விலகியதாகவும், அவருக்கு பதிலாக அருண் விஜய் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.


இந்த நிலையில்,  விருது விழா ஒன்று பேசிய வெற்றிமாறன், விடுதலை 2 முடிந்ததும் அடுத்தது வாடிவாசல் பற்றிய அப்டேட் தான் முழுக்க முழுக்க இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் சூர்யா ரசிகர்கள் குஷியாகியுள்ளார்கள்.

வாடிவாசல் படத்தில் சூர்யா ஜல்லிக்கட்டு காளையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலான நிலையில், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement