• Nov 19 2024

விஜய்யின் வேலாயுதம் படத்தின் பாகம் இரண்டு வருமா?- இயக்குநர் கூறிய குட் நியூஸ்- கொண்டாடி வரும் விஜய் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார்.

 மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் வேலாயுதம்.


 சூப்பர் ஹீரோ படமாக வெளிவந்த இந்த படத்தினை இயக்குநர் மோகன் ராஜா இயக்கி இருந்தார். விஜய் ஆண்டனி இசையில் இந்த படம் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி நடித்தனர். 


இச்சூழலில் இயக்குநர் மோகன் ராஜா, சொப்பன சுந்தரி படத்தின் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் "வேலாயுதம்-2, தனி ஒருவன்-2 படத்தின் இரண்டாம் பாகம் வருமா?" என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மோகன் ராஜா, "கண்டிப்பா உண்டு, இந்த வருடம் கிடையாது. அடுத்த வருடம்" என பதில் அளித்து விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement