• Nov 14 2024

முதல் நாளிலே பொன்னியின் செல்வன் படத்துக்கு இப்படியா நடக்கனும்..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' இன்று (செப் 30) திரையரங்குகளில் வெளியானது.தமிழ்நாட்டில் இன்று அறிவிக்கப்படாத சினிமா திருவிழாவாக 'பொன்னியின் செல்வன்' திரைப்படம்  ரசிகர் மத்தியில் கொண்டாடப்படுகிறது. கோலிவுட்டின் பல வருட கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார்.

 உலகம் முழுவதும் ரிலீஸான பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோரின் நடிப்பு, ஏஆர் ரஹ்மானின் இசை, ரவிவர்மனின் ஒளிப்பதிவு போன்றவற்றை ரசிகர்கள்   வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அத்தோடுபொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் புக்கிங் இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பித்துவிட்டது. ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர். அத்தோடு , டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உட்பட தமிழ்நாட்டின் அனைத்து ஏரியாவிலும் ஆல் ஷோஸ் ஹவுஸ்ஃபுல்லானது.

இவ்வாறுஇருக்கையில் , பொன்னியின் செல்வன் படத்திற்கு மற்ற மாநிலங்களில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. கடந்த பத்து நாட்களாக கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி நகரங்களில் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன்ஸ் நடைபெற்றது. அதற்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், படம் வெளியான முதல் நாளில் கூட பல திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு திரையரங்குகளில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்துக்கு சினிமா விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்களிடம் இருந்தும் நேர்மறையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. அதனால், பொன்னியின் செல்வன் படத்துக்கான வரவேற்பு இன்னும் அதிகமாகும் என்றும், மற்ற மாநில ரசிகர்களும் படத்தை பார்க்க ஆர்வம் காட்டுவார்கள் எனவும் கூறப்படுகின்றது.

அதேபோல், தமிழ்நாட்டில் அடுத்த வாரமும் பொன்னியின் செல்வன் படத்திற்கான டிக்கெட்டுகள் சீக்கிரம் விற்று தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பொன்னியின் செல்வனுக்கு வெளிநாடுகளில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், வசூலில் மாஸ் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement